search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோதர சகோதரிகள் பாசம்"

    சகோதர-சகோதரிகளின் பாசத்தை உணர்த்தும் ரக்‌ஷா பந்தன் பண்டிகை நாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் பல்வேறு துறைகளை சேர்ந்த 55 பெண் பிரபலங்களை பின்தொடர்ந்தார். #PMModiTwitter #PMModifollows
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடியின் அலுலவக டுவிட்டர் பக்கத்தை சுமார் 2 கோடியே 70 லட்சம் அபிமானிகள் பின்தொடர்ந்து வருகின்றனர். உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் உள்பட 438 பேரை அவரது அதிகாரப்பூர்வ அலுலவகத்தின் டுவிட்டர் பக்கம் பின்தொடர்கிறது.

    இதேபோல், நரேந்திர மோடி என்ற பெயர் கொண்ட தனிப்பட்ட டுவிட்டர் கணக்கில் அவரை சுமார் 4 கோடியே 30 லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். சுமார் 2 ஆயிரம் பேரின் டுவிட்டர் பக்கங்களை அவர் பின்தொடர்கிறார்.

    இந்நிலையில், சகோதர-சகோதரிகளின் பாசத்தை உணர்த்தும் ரக்‌ஷா பந்தன் பண்டிகை நாளான இன்று விளையாட்டு, ஊடகம் உள்ளிட்ட துறைகளை சேர்ந்த 55 பெண் பிரபலங்களை டுவிட்டரில் அவர் பின்தொடர்ந்தார்.

    பேட்மிண்டன் வீராங்கனை அஷ்வினி பொன்னப்பா, டென்னிஸ் வீராங்கனைகளான சானியா மிர்ஸா மற்றும் கர்மான் கவுர், ஓட்டப்பந்தய வீராங்கனை பி.டி.உஷா, முன்னாள் இந்திய அழகியும் குழந்தைகள் நல ஆர்வலருமான சுவரூப், பத்திரிகையாளர்கள் ரோமானா இஸார் கான், சுவேதா சிங், பத்மஜா ஜோஷி, ஷீலா பட், ஷாலினி சிங். 

    நடிகை கோயெனா மித்ரா, பளுதூக்கும் வீராங்கனை கர்னம் மல்லேஸ்வரி, பத்திரிகை புகைப்படக் கலைஞர் ரேணுகா புரி மற்றும் சில பெண் பா.ஜ.க. உறுப்பினர்கள் மற்றும் சில மாநிலங்களை சேர்ந்த மந்திரிகளையும் அவர் பின்தொடர்ந்துள்ளார்.

    அவர்களில் சிலர் தங்களை பின்தொடர்வதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்ததுடன் ரக்‌ஷா பந்தன் நல்வாழ்த்துகளையும் பரிமாறி கொண்டனர். #PMModiTwitter #PMModifollows
    ×